இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் உலகளவில் பிரபலமடைந்து வருகிறது: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2021, 12:46 PM IST
இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் உலகளவில் பிரபலமடைந்து வருகிறது: பிரதமர் மோடி  title=

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29, 2021) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான "மன் கி பாத்" 80 வது நிகழ்ச்சியின்  மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள்: 

"திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது காலத்தின் தேவை" என்று பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.

"சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த பாராட்டத்தக்க வேலைகளைச் செய்யும் நபர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் அவர்களைப் பற்றி  சமூக ஊடகங்களில் எழுதுங்கள்" என்று பிரதமர் மோடி கூறினார்.

"இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் உலகளவில் பிரபலமடைந்து வருகிறது" என்றார் பிரதமர் மோடி

"மன் கி பாத் இனி இந்திய நிகழ்ச்சி என கூற இயலாது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். "நான் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடமிருந்தும் தகவல்களை பெறுகிறேன்," என்று பிறதமர் கூறினார்.

ALSO READ | அனைத்து வித நெருக்கடியிலும் இந்தியர்களுக்கு துணை நிற்கும் இந்தியா: பிரதமர் மோடி

"மத்திய பிரதேசத்தின் இந்தூர் கடந்த பல ஆண்டுகளாக 'தூய்மை தொடர்பான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இப்போது, ​​இந்தூர் மக்கள் தங்கள் நகரத்தை 'வாட்டர் பிளஸ் சிட்டி'யாக மாற்ற முடிவு செய்துள்ளனர். நம் நாட்டில்,' வாட்டர் பிளஸ் சிட்டி' மூலம்  தூய்மை மேலும் மேம்படும், ”என்று பிரதமர் மோடி கூறினார்.

"பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு இந்தியா உற்சாகமளிக்கிறது. பெரிய அளவில், இந்தியா முழுவதும் விளையாட்டுகளை நோக்கி புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இனி நமது மைதானங்கள் வீரர்களால் நிரம்பியிருக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி (PM Narendra Modi) கூறினார்.

இந்திய இளைஞர்களை பாராட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் விண்வெளித் துறை, ஸ்டார்ட் அப் துறை  மிகவும் துடிப்பாக செயல்படுகிறது. இந்தியாவின் இளைஞர்கள் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றார் பிரதமர் மோடி

"இந்த ஆண்டு நாம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றோம். மேஜர் தியான் சந்த் இன்று இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். இன்று இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஈர்ப்பை பார்க்கிறோம். விளையாட்டு மீதான இந்த ஆர்வம் மேஜர் தியான் சந்திற்கு  செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி, "என்றார் பிரதமர் மோடி.

"இந்த உத்வேகத்தை நிறுத்த விடக்கூடாது. கிராமங்கள், நகரங்கள், நகரங்களில் உள்ள எங்கள் விளையாட்டு மைதானங்கள் வீரங்களால் நிரம்பியிருக்க வேண்டும். அனைவரின் பங்கேற்பின் மூலம் மட்டுமே, இந்தியா சிக்ரத்தை அடைய முடியும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், ஆகஸ்ட் 29 பிட் இந்தியா இயக்கத்தின் (Fit India Movement) இரண்டாம் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விளையாட்டு அமைச்சர் மற்றும் இளைஞர் நலத்துறை அனுராக் தாக்கூர் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிட் இந்தியா மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறார். இந்த அறிமுகம் தில்லியின் மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

ALSO READ | செப். 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்; உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News