ITR Filing: வருமான வரி தாக்கலுக்கான புதிய போர்ட்டலில் பல தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் இதுவரை 1.19 கோடி என்ற அளவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 வரை தனி நபர் வருமான வரி தாக்கல் செய்ய 8.83 கோடி பேர் புதிய இணையதளத்தில் ’லாக் இன்’ (Log-In) செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தினசரி போர்ட்டலில், தினமும் சராசரியாக 15.55 லட்சம் வரி செலுத்துவோர் 'Log-In' செய்கிறார்கள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வரி போர்டலில் உள்ள சிக்கலகள் தீர்க்கப்பட்டன
பல தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், போர்ட்டலில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வருமான வரித்துறை (Income Tax Department) தெரிவித்துள்ளது. 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கு 1.19 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 76.2 லட்சம் வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்ய போர்ட்டலின் ஆன்லைன் செயலியை பயன்படுத்தியுள்ளனர் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கூறியுள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தில், தினசரி வருமான வரி தாக்கல் (ITR) தாக்கல், 3.2 லட்சமாக அதிகரித்துள்ளது.
ALSO READ Finance Ministry: என்று முடிவுக்கு வரும் வருமான வரித்துறை இணையதளக் கோளாறு Infosys?
இதுவரை, 94.88 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் இணைய வழியில் ( e-verify) சரிபார்க்கப்பட்டுள்ளது. இதில் 7.07 லட்சம் வருமான வரி தாக்கல் கள் ப்ராசஸ் செய்யப்பட்டுள்ளன. 7.86 லட்சம் TDS அறிக்கைகள், அறக்கட்டளைகள்/நிறுவனங்களின் பதிவுக்காக 1.03 லட்சம் 10 Aபடிவங்கள், சம்பள நிலுவைத் தொகை தொடர்பாக 0.87 லட்சம் 10E படிவங்கள் மற்றும் மேல்முறையீட்டிற்கான 0.10 லட்சம் படிவம் எண் 35 உட்பட 10.60 லட்சத்துக்கும் மேற்பட்ட சட்டரீதியான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ALSO READ | வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு; முழு விபரம் உள்ளே..!!
புதிய போர்டலில் சிக்கல்கள்
இந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி, www.incometax.gov.in என்ற வருமான வரி தாக்கலுக்கான புதிய இ-ஃபைலிங் போர்டல் (New IT Portal) தொடங்கப்பட்டது தொடங்கப்பட்ட நாளிலிருந்து, அதில் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. புதிய போர்டலை உருவாக்கிய ஐடி நிறுவனமான இன்போசிஸ், தொழில்நுட்ப சிக்கலகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. தொல்நுட்ப பிரச்சனை நீண்ட காலம் நீடித்தததன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது.
ALSO READ | வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR