வீர மங்கை வேலுநாச்சியாரை வணங்கி மகிழ்கிறேன் : பிரதமர் மோடி தமிழல் ட்வீட்
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
வீரமங்கையான வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலு நாச்சியார், இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்ற ஊரில் 1703ம் ஆண்டு ஜனவரி 3ந்தேதி பிறந்தார். 1780 முதல் 1789 வரை சிவகங்கையில் அவர் ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீர மங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளான இன்று, வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி, தமிழல் ட்வீட் செய்துள்ளார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதை மெய்பிக்கும் வகையில் சிறுவயதிலேயே நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலு நாச்சியார், வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற எல்லா போர்க் கலைகளையும் கற்றார்.
ஆங்கிலேயப் படையை அழித்து, நவாபை வீழ்த்தி, சிவகங்கைச் சீமையில் அனுமன் கொடியை மீண்டும் பறக்க விடுவது என்று சபதமேற்ற வேலுநாச்சியார், மருது சகோதரர்களை அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் சென்றார்.
மும்முனை தாக்குதல் நடத்தி, வெற்றி வாகை சூடினார். சரித்திரத்தில் இடம் பெற்ற வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டு சிவகங்கை அரசியாகப் வேலு நாச்சியார் பதவியேற்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR