மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் உஜ்வாலா (Pradhan Mantri Garib Kalyan Yojana) திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கபட்டுள்ளது. அப்போது, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் (PMGKY) கீழ் 6.28 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இதுவரை இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.


கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி 24% வழங்கப்படும் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியை மேலும் 3 மாதங்களுக்கு செலுத்துவதன் மூலம் ரூ.4,860 கோடி செலவு ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை அரசே செலுத்தும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 3 மாத பி.எஃப் சந்தாவில் தொழிலாளர் பங்காக 12%, நிறுவனத்தின் பங்காக 12%-யை அரசு செலுத்தும்.



READ | See Pic: இங்கு மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை கிடைக்கும்... தெரிக்கவிடும் மதுரை மக்கள்..!


பிரவீன் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மொத்தம் 213.77 கோடி மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலின் பொருளாதார வலியைச் சமாளிக்க உதவும் வகையில் நாட்டின் ஏழ்மையானவர்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகிக்கும் திட்டத்தை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


நகர்ப்புற ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் குடியிருப்புகளை கட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு 1 ஜூலை 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், 81 கோடி ஏழைகளுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் இன்னும் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் மாதத்திற்கு ஒரு கிலோ பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.