கனிமொழி அவர்கள் தில்லிக்கு விமான மூலம் பயணம் மேற்கொள்ள சென்ற போது விமான  நிலையத்தில், தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டதற்கு,  ‘நீங்கள் இந்தியரா?’ என்று பாதுகாப்பில் இருந்த CISF வீரர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது என்பதை அறிய விரும்புகிறேன் எனவும் ட்விட்டரில்  குறிப்பிட்டார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள CISF நிர்வாகம், இந்தி மொழியில் தான் பேச வேண்டும் என்ற கொள்கை எதுவும், இல்லை, உடனடியாக இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு செய்தது.


ALSO READ | சாத்தான்குளம் கஸ்டடி மரண வழக்கு: கைதான SSI பால்துரை கொரோனாவால் மரணம்!!


அதற்கு அளித்த பதிலில், தகவல்கள் எதுவும் தராமல், நன்றி என மட்டும் ட்வீட் செய்துள்ளார்.


திமுக தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு நிலையை கடைபிடித்தாலும், அக்கட்சியை சேர்ந்த அனைவரும் இந்தி மொழி நன்றாக அறிந்தவர்கள் என கூறப்படுகிறது.  


திமுக கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விஷயம் தொடர்பாக  திமுக எம்பி கனிமொழியை தாக்கி பேசிய பாஜக மூத்த தலைவர் பி எல் சந்தோஷ், தமிழ்நாட்டு சட்டபேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி விட்டது என்றார்.


இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், சந்தோஷ் ஆணவத்துடன் பேசியுள்ளதாக குறிப்பிட்டார்.


அதற்கும் பாஜக மூத்த தலைவர் சந்தோஷ் அவர்கள், CISF கேட்டுக்கொண்டபடி விபரங்களை கனிமொழி அவர்கள் தரட்டும். அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ஆணவத்தை பற்றி ஆலோசனை செய்யலாம் என பதிலளித்துள்ளார். 


ALSO READ | Viral Video: மரத்திலிருந்து இளநீரை அசால்டாக குடிக்கும் பஞ்சவர்ணக்கிளி..!!!


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தானும் இந்தி மொழி தெரியாததால், பல இன்னல்களை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.



இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.