மிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ் குந்த்ரா ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் (Shilpa Shetty) கணவர் ராஜ் குந்த்ரா (Raj Kundra) ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களைத் (Pornographic films) தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விஷயத்தில் ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.


ALSO READ | சன்னிலியோனின் 7-வருட கால வாக்குறுதி: என்ன தெரியுமா?


இது குறித்து மும்பை போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மும்பையில் ஆபாச படங்களைத் தயாரித்து, அவற்றை சில மொபைல் போன் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது. 


 



 


 நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் அவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் தற்போது இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பல மணி நேர விசாரணைக்குப் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பிரிட்டன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கெண்ட்ரிங் என்ற நிறுவனத்தில் ராஜ் குந்த்ரா ரூ 10 கோடி முதலீடு செய்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் உமேஷ் என்ற நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்கள் தொடர்பாக குந்த்ராவிற்கும் உமேஷுக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை நடந்தததாகவும் இதன் பேரில் அவர்கள் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரில் தான் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டன.


ALSO READ | வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபுதேவா ஹீரோயின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR