சன்னிலியோனின் 7-வருட கால வாக்குறுதி: என்ன தெரியுமா?

ஆபாச இணையதள படங்கள் மூலம் பிரபலம் ஆன பாலிவுட் நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

Last Updated : Apr 13, 2018, 01:15 PM IST
சன்னிலியோனின் 7-வருட கால வாக்குறுதி: என்ன தெரியுமா?

ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன பாலிவுட் நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை 'வடகறி' என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது.

இவர் தற்போது, தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  சன்னி லியோன் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. 

மாறாக இந்த தம்பதியினர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சன்னி லியோன் திருமண நாளையொட்டி தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், தங்களுடைய திருமண புகைபடத்தை வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்துடன் தன்னுடைய கணவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதி ஒன்றையும்  குறிப்பிடுள்ளார்.

அதில், வாழ்க்கை என்னை எந்த சூழலுக்கு மாற்றி அழைத்துச் சென்றாலும் நம்முடைய காதல் மட்டும் மாறக்கூடாது. 

நாம் இருவரும் என்றைக்கும் காதலித்துக்கொண்டே இருப்போம் என்றேன். ஆனால் இன்றைய தினம் அதை மேலும் அதிகமாக உணர்கிறேன் என்றார்.

More Stories

Trending News