புதுடெல்லியின் வடமேற்கு பகுதியில் வசித்து வந்த மருத்துவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜனக்பூரில் வசித்து வந்த மருத்துவர் முகின், வயது 65. வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இன்று காலை சுமார் 10.30 மணியளவில் அப்பகுதி காவல்நிலையத்திற்கு வந்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் முகினை சடலமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட முகினின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவர்களின் அறிக்கையின் படி முகின் உடலில் மர்ம காயங்கள் இருந்ததாகவும்., இதன் காரணமாக முகின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறை ஆணையர் அஸ்லாம் கான் தெரிவித்துள்ளார்.


காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் படி முகின் வீடு பூட்டப்படாத நிலையில் இருந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த அலமாறிகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. எனவே முகினை கொலை செய்தவர், அவருக்கு முன்னரே பரிச்சையபட்டவராக இருத்தல் வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலையானது பணத்திற்காக நடத்ததப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், முகினின் இறப்பு மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.