பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு ஆகஸ்ட் 24 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன்னிப்பு கோர நீதிமன்றம் வழங்கும் கடைசி வாய்ப்பு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


முன்னதாக, பிரசாந்த பூஷன் அவர்கள், கடந்த ஆறு வருடங்களாக நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்தும், இந்திய தலைமை நீதிபதி எஸ் ஏ  பாப்டே குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.


 இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் இதை தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.


விமர்ச்சிப்பதற்கு ஒரு எல்லை உண்டு, அதனை மீறுவதற்கான தேவை என்ன என உச்சநீதிமன்றம், பிரஷாந்த் பூஷணிடம் வினவியது


இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. தண்டனை அளவு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது. 


இது குறித்து கருத்து தெரிவித்த பிரஷாத் பூஷன், தான் குற்றவாளி என தீர்ப்பளிப்பட்டதற்காக வருத்தப்படவில்லை, தன்னை புரிந்து கொள்ளவில்லை என்பதால் வருத்தப்படுகிறேன் என கூறினார்.


"பொது நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் வழக்குகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நீதிமன்ற அவமதிப்பை பொறுத்தவரை இது ஒரு தீவிரமான விஷயம். நான் ஒரு நீதிபதியாக 24 ஆண்டுகளில் யாரையும் நீதிமன்ற அவமதிப்பிற்காக குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதில்லை. இது எனது முதல் உத்தரவு” என்று நீதிபதி மிஸ்ரா கூறினார்.


மேலும் படிக்க| தூய்மையான நகரங்களின் பட்டியலில் 4-வது முறையாக முதலிடம் பிடித்த இந்தூர்!!


 


"உங்கள் அறிக்கை சரி என்று நீங்கள் நினைத்தால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லலாம். ஆனால் நீங்கள் அதை மாற்றக் கொள்ள விரும்பினால், நீதிமன்றம் அதைப் பற்றி சிந்திக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கிறது" என்று நீதிபதி மிஸ்ரா கூறினார்.


ஆகஸ்ட் 14 அன்று, உச்சநீதிமன்றம் 108 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வழங்கியது, “உண்மைக்கு புறம்பாம்ன விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது ட்வீட்டுகள், நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டவை. இதன் விளைவாக, இந்த நீதிமன்றத்தை அவமதித்தற்காக  திரு பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று நாங்கள் கருதுகிறோம். ” என தீர்ப்பளித்தது.


மேலும் படிக்க|  ஸ்ரீராமர் கோயில் காலம் கடந்து நிற்க நுட்பத்தை சொல்கிறது சென்னை IIT...!!!