சாய்பாபாவின் 100 வது சமாதி தினத்தை முன்னிட்டு ஷிர்டியில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


1918 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று சாய்பாபா சமாதி நிலையை அடைந்தார். இதன் 100 வது ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று, பிரதமர் மோடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார். சாய்பாபா டிரஸ்ட் சார்பில் ரூ.475 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.



மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தின் பயனடைந்த பயணாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளையும் வழங்க உள்ளார். தொடர்ந்து அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார். சாய் தர்ஷன் கட்டிடம் 18,000 க்கும் அதிகமான பக்தர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....!