தமிழகத்தில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 வரை உயருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொள்முதல் விலை உயர்வால், பால் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.


தமிழகத்தில் நாளை முதல் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆவினுடன் இணைந்து ஹட்சன், ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. 


இந்நிலையில், கொள்முதல் விலை உயர்வால் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிக்கை அனுப்பியுள்ளன. அதன்படி, நாளை முதல் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்த்தப்படுகிறது.