2019 மக்களவைத் தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய முகமாக இருந்த நிபாஷ் சர்க்கார், NRC-ல் பெயர் இடம்பெறாஅச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலின்போது, ​​அனுமன் சர்க்கார் அனுமனின் மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஆனால் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4), நிபாஷ் சர்க்கார் தனது கிராமமான ஹன்ஸ்காலியில் தற்கொலை செய்து கொண்டார்.


சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்த பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இப்போது நாடு முழுவதும் NCR செயல்படுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. 


ராணகட் மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் ஜெகந்நாத் சர்க்காருக்காக நிபாஷ் சர்க்கார் கடுமையாக பிரச்சாரம் செய்தார். நிபாஷின் தற்கொலை வழக்கு தொடர்பான ஆரம்ப விசாரணையின் பின்னர், நிபாஷ் ஒரு விஷப் பொருளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


நிலைமை மோசமடைந்தபோது நிபாஷ் சக்திநகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியில் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இருப்பினும், நிபாஷின் உறவினர்கள் NCR-க்கு பயந்து நிபாஷ் தற்கொலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக நிபாஷின் அண்டை வீட்டாரான தீபக் ராயிடம் கேட்டபோது, நிபாஷின் ​​தற்கொலைக்கான காரணத்தை கூற நிபாஷின் குடும்பத்தினர் தயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.