சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை! பட்ஜெட் அறிவிப்பின் பின்னணி!
Stamp Duty For Women : சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படலாம் என்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்..
நாட்டில் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க வலியுறுத்தப்படும் என்றும், சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்துக் கொள்வோம்.
சொத்துப் பதிவில் முக்கியப் பங்கு வகிக்கும் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் சொத்து வாங்கும் போது ஒருவர் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும். சொத்து பரிவர்த்தனையின் போது முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை மாநில அரசு விதிக்கிறது.
இந்தக் கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தமிழகத்தில் சொத்து வாங்கியிருந்தால், தமிழ்நாடு முத்திரைத் தீர்வைச் சட்டத்தின்படி முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் அதிக முத்திரை கட்டணம், பதிவுக் கட்டணங்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது.
இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் தமிழ்நாடு முத்திரைச் சட்டம், 2019 ஆகியவற்றின் படி, சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடும் போது கட்டணம் செலுத்த வேண்டும். சொத்தை பிரிப்பது, குத்தகை, விற்பனை, மறுவிற்பனை என பத்திரப் பதிவுகளின் போது முத்திரை வரி செலுத்தப்படுகிறது.
முத்திரைக் கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
சொத்தின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் முத்திரைக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. சில மாநிலங்களில் பெண்களுக்கு முத்திரைக் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். அதேபோல தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றது பலரின் அதிருப்தியையும் பெற்றது.
வழக்கமாக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி வருகிறது. அரசுக்கு கிடைக்கும் முக்கிய வருவாயில் முத்திரை கட்டணம் முக்கியமானது.
சொத்துரிமை சட்டம்
ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்பது தெரிந்தாலும், பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதனை பெற முடியும்.
மேலும் படிக்க | Budget 2024 பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்... முக்கிய அறிவிப்புகள்
பெண்களுக்கு சொத்து உரிமை
1956ம் ஆண்டியி நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டம் தான் பெண்களுக்கான சொத்து உரிமைகளை தந்தது. இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் சொத்தில் உரிமை எதுவும் கிடையாது.
ஒரு திருமணமான பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது. ஆனால், 1956ம் தேதியறு நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்றும் அனைவருக்கும் சமஉரிமை உண்டு என்றும் சொன்னது.
2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்து பெண், பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது என்றும், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தந்தையின் பூர்வீகச் சொத்தில் பங்கு கேட்கலாம். ஆனால், அந்த குறிப்பிட்ட சொத்து, அதற்கு முனரே பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பங்கு கோரமுடியாது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ