கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும்  பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 19.5 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான Sputnik V  தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுச்சேரியில் துவங்க வேண்டும் என  ஸ்புட்னிக் (Sputnik V) மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.


தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் நடந்த காணொலி கூட்டத்தில், கொரோனாவிற்கான புதிய 2-DG மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனதுடன் ஆளுநர் தமிழிசை கலந்துரையாடினார்.
இதற்கு, ஸ்புட்னிக் மருந்து தயாரிப்பு தொடர்பாக டாக்டர் ரெட்டிஸ் குழுமத்தினர் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இது குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


ALSO READ | ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி AK47 போல நம்பகமானது: விளாடிமிர் புடின்


மே 1 ஆம் தேதி, இந்தியாவிற்கு  ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியின் 15 லட்சம் டோஸ் வந்துள்ள நிலையில், மேலும்  15 லட்சம் டோஸ் விரைவில் இந்தியாவிற்கு வந்து சேரும் என கூறப்படுகிறது.


இந்தியாவுக்கு, மே மாதத்தில் 30 லட்சம், ஜூன் மாதத்தில் 50 லட்சம், ஜூலை மாதம் 1 கோடி என்ற அளவில், 1 கோடியே 80 லட்சம் ஸ்பூட்னிக் வி டோஸ் கிடைக்கும் . தடுப்பூசிக்கு நிதியளித்த ரஷ்ய இறையாண்மை நிதியமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF) 5 இந்திய நிறுவனங்களுடன் 85 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


ALSO READ | Sputnik V: 2022 மார்ச் மாதத்திற்குள் 36 கோடி இந்தியர்களுக்கு ரஷ்ய தடுப்பூசி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR