குரூப்பை விட்டு தூக்கியதால் வாட்ஸ்அப் அட்மினின் நாக்கை அறுத்த கும்பல்
Attack on Whatsapp group admin : குடியிருப்போர் சங்கத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து தன்னை நீக்கியதால் கோபமடைந்த ஒருவர், கும்பலுடன் அட்மினை தாக்கி நாக்கை வெட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஃபர்சுங்கி பகுதியில் கடந்த டிச.28ஆம் தேதி இரவு 10 மணியளவில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வகையில், ஹடாப்சர் காவல் நிலையத்தில் 38 வயது பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, ஓம் ஹைட்ஸ் ஹவுசிங் சொசைட்டி என்ற குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.
ஹவுசிங் சொசைட்டியின் தலைவரான அந்த பெண் கொடுத்த புகாரில்,"எனது கணவர், அந்த குடியிருப்பில் வசிப்பவர்களை இணைத்து,'Om Heights Operation' என்ற பெயிரில் குடியிருப்போரின் தகவல் பகிர்வுக்காக ஒரு வாட்ஸ் குழுவை தொடங்கினார். அவர்தான் அந்த குழுவின் அட்மினாக செயல்படுகிறார்.
அந்த குழுவில் இருந்த ஒருவரை எனது கணவர் அதிலிருந்து நீக்கியுள்ளார். குழுவில் இருந்து நீக்கப்பட்டவர் இதனால் கோபமடைந்து, 'என்னை ஏன் நீக்குகிறீர்கள்?' என்று கேள்வியெழுப்பினார். ஆனால், அதற்கு எனது கணவர் பதிலளிக்கவில்லை. பின்னர் எனது கணவரை தொடர்புகொண்டு, தனியே சந்திக்க வேண்டும் என அழைத்தார்.
மேலும் படிக்க | Hunger Strike: சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாரா பாஜக தமிழ் எம்.எல்.ஏ?
அப்போது, குடியிருப்போர் சங்க அலுவலகத்தில் நானும், எனது கணவரும் இருந்தபோது, குழுவில் இருந்து நீக்கப்பட்டவர் கும்பலுடன் வந்தார். அவர்கள் கும்பல் எனது கணவர் தாக்கியது. அவர்கள் தாக்கியதை அடுத்து,'அந்த வாட்ஸ்அப் குழு மொத்தமாக டெலீட் செய்யப்பட்டுவிட்டது. ஏனென்றால், பலரும் சம்பந்தமில்லாத தகவலை பகிர்கின்றனர். அதனால், அதனை அழித்துவிட்டேன்' என விளக்கமளித்தார்.
அவர்களின் தாக்குதலால், எனது கணவரின் நாக்கு வெட்டப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் நாக்கு தகைப்பட்டாலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இதன்பின்னரே, தாக்குதல் நடத்திய 5 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | Freebies: இலவசங்களை வாரி வழங்கும் மத்திய அரசு! இலவச ரேஷன்! இலவசமாய் டிவி பார்க்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ