காங்கிரஸ் கட்சிக்கு ராகுலைப்போல இளைஞரை தலைவராக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் காட்சியின் படு தோல்வியை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா தனது பதவியல் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரைத்தொடர்ந்து மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.


எனினும் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் யாரும் இல்லாத நிலையில் இவர்களது ராஜினாமா நிலுவையில் உள்ளது. இதற்கிடையில்  காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? என்பது குறித்து காரியகமிட்டி தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது.


கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சுசீல்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக்கெலாட் மற்றும் இளம் தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேப்போல் மனீஸ்திவாரி, சசிதரூர் ஆகியோர் பெயரும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ராகுல் காந்தி போன்ற இளைஞர் தான் காங்கிரசுக்கு அடுத்த தலைவராக வரவேண்டும் என்று பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.


காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியது துரதிருஷ்ட வசமானது. அவருக்கு பதிலாக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுபவர் ராகுல் காந்தியை போன்ற இளைஞராக இருக்க வேன்டும். இதை காங்கிரஸ் காரியகமிட்டி கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.