Video: பட்டுனு வெடித்த துப்பாக்கி... சட்டுனு சுருண்டு விழுந்த இளைஞர் - பதறிய போலீஸ்

காவலர் ஒருவர் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டதில், இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரில் உள்ள மொபைல் கடைக்கு காவலர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு மொபைல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, தனது பிஸ்டல் கைத்துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்த கவுன்டரில் வைத்துள்ளார்.
அவ்வாறு கவுன்டரில் வைக்க முற்படும்போது, அவரை அறியாமல் துப்பாக்கியால் சுட்ட நிலையில், எதிரே இருந்த அந்த கடை உரிமையாளர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதை தொடர்ந்து, கடுமையாக காயமடைந்த அந்த பணியாளரை உடனடியாக மருத்துவமைனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அம்ரித்சரில் நேற்று நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர் இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியுள்ளதாகவும் அம்ரித்சர் வடக்கு துணை காவல்கண்காணிப்பாளர் வரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த இளைஞர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தையும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தையும் வைத்து காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்ற ஒரு சம்பவம், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்தது. அதில், காவலர் ஒருவரின் ரைஃபிள் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில், பொதுமக்களில் ஒருவர் மீது குண்டு பாயந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைதானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைத்து ரூ. 32 ஆயிரம் கோடிகளை பெற்ற எம்பி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ