இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து  குவாட் (QUAD)என்னும் கூட்டணியை அமைத்துள்ளது இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) ஆகியோர் இன்று "குவாட்" நாடுகளின் தலைவர்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 


அமெரிக்க அதிபராக ஜோ பைடன் (Joe Biden), பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சந்திக்கும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். 


நான்கு நாடுகளும் காலநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்ற குழுக்களை நிறுவ திட்டமிட்டுள்ளன; வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பத் தரங்கள் மற்றும் விதிமுறைகளை அமைப்பதில் பணியாற்றுவது மற்றும் எதிர்காலத்தின் சில முக்கியமான தொழில்நுட்பங்களை கூட்டாக உருவாக்குவது உட்பட, பல விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும், சுமார் 90 நிமிடங்கள் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில், மிக முக்கியமாக, பொருளாதார ரீதியாக சீனாவை சார்ந்து இருப்பதை தவிர்க்கும் வகையில், தொழில் நுட்பம், இயற்கை வளம், எரிவாயுத் தொழில்நுட்பம் ஆகியவவற்றை மேம்படுத்த இந்த குவாட் நாடுகள் கூட்டணி முயற்சிகளை மேற்கொள்ளும். 


ALSO READ | கூகிள், பேஸ்புக், ட்விட்டர் மீது ரஷ்யா வழக்கு பதிவு; காரணம் என்ன..!!


இது தவிர, இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி (Corona vaccine)  உற்பத்தி பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  இந்தியாவில் அதிக அளவில் அமெரிக்க தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நிதி வசதியை ஏற்படுத்துவது, உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


உச்சி மாநாடு பற்றி கூறிய ஆஸ்திரேலிய  பிரதமர் ஸ்காட் மாரிசன், பருவநிலை மாற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகள், கொரோனா நோயை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 


ALSO READ | மறக்கமுடியாத உதவி, மிக்க நன்றி: விளம்பரப் பலகை வைத்து பிரதமர் மோடியை பாராட்டிய Canada


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR