கனடா: இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கனடா பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, தடுப்பூசிகளை வழங்கியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல விளம்பர பலகைகள் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் காணப்பட்டன. ஜனவரி 20 ஆம் தேதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட (Made-in-India) தடுப்பூசிகளை இந்தியா வெளிநாடுகளுக்கு அனுப்பத் துவங்கியது. அதிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியா 481 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
முன்னதாக மார்ச் 4 அன்று, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி (AstraZeneca) அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, கனடா இந்தியாவில் இருந்து COVID-19 க்கான எதிரான தடுப்பூசிகளைப் பெற்றது. அதன்பிறகு ஓக்வில்லேவின் எம்.பி.யும் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சருமான அனிதா ஆனந்த், “AZ / CoviShield தடுப்பூசி இப்போது கனடாவில் உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிலிருந்து இன்று காலை 500,000 டோஸின் முதல் பேட்ச் வந்தது. 1.5 மில்லியன் டோஸ்கள் இன்னும் வரவுள்ளன. இந்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்த உங்களது கடின உழைப்புக்கு மிக்க நன்றி. எதிர்காலத்தில் நல்ல இணைப்பையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
ALSO READ: Disease X: கொரோனாவை விட பயங்கரமான வைரஸ் விரைவில் வருகிறது, எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த வாரம் மேலும் 944,600 டோஸ் COVID-19 தடுப்பூசிகள் கனடா வந்தடையும் என்றும் அவர் முன்பு கூறியிருந்தார். அவற்றில் 444,600 டோஸ் ஃபைசர் மற்றும் 500,000 டோஸ் அஸ்ட்ராஜெனெகாவினுடியயது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்க ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய பிக்கரிங்-ஆக்ஸ்பிரிட்ஜின் எம்.பி. ஜெனிபர் ஓ'கோனெல், “மிக அருமையான முறையில் பணி செய்துள்ளீர்கள். கடந்த வெள்ளிக்கிழமை அஸ்ட்ராஜெனெகாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சர் அனிதா, அவரது குழு மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. ஒப்புதல் அளிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் நாம் 500,000 டோஸ்களை பெற்று விட்டோம். இன்னும் 1.5 மில்லியன் டோஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன. மார்ச் மாத இறுதிக்குள் 6.5 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களைப் பெற நாம் இப்போது தயாராக உள்ளோம்!” என்று கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேசினார். கனடாவின் கோவிட் -19 தடுப்பூசி முயற்சிகளுக்கு இந்தியா தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.
தனது பாராட்டுக்களை வெளிப்படுத்திய கனேடிய பிரதமர், உலகம் COVID-19-க்கு எதிரான போரில் வெற்றி பெற்றால், அதற்கு இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ திறன் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும். அந்த திறனின் பயன்களை உலகுடன் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடிக்கும் அதில் ஒரு பெரிய பங்கு இருக்கும்” என்று கூறினார். கனேடிய பிரதமரின் உணர்வுகளுக்காக பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறுகையில், “அன்புள்ள மாண்புமிகு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மற்றும் அதன் தடுப்பூசி தொழில்துறை குறித்த உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.” என்று கூறியிருந்தார்.
ALSO READ: COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR