லடாக் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்பு!
லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்!!
லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியிட்ட காஷ்மீர் மறுசீரமைப்புக்கான மத்திய அரசின் உத்தரவுக்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இவர்களில் லடாக் யூனியன் பிரதச துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவியேற்றுக்கொண்டார். காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதால், IAS, IPS மற்றும் J&K கேடரின் பிற மத்திய சேவை அதிகாரிகள் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து பணியாற்றுவர். J&K மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தற்காலிக வலிமை, அமைப்பு மற்றும் அதிகாரிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து லெப்டினன்ட் கவர்னர்கள் முடிவு செய்வார்கள்.
மாநில அரசு ஊழியர்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவதற்கான விருப்பத்தை நாட முடியும் என்றும் இந்த இடமாற்றம் லெப்டினன்ட் ஆளுநரால் தீர்மானிக்கப்படும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.