இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே... ராகுல் காந்தி தாக்கு
பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி, குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்களுக்கான பாஜகவின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
புது டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இன்று வியாழக்கிழமை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒரு ட்வீட் மூலம் குஜராத்தில் பில்கிஸ் பானோ வழக்கு தொடர்பாக பிரதமர் மோடியை குறிவைத்துள்ளார். குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்கள் மீதான அக்கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவதற்கு வெட்கப்படவில்லையா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மற்றும் ஹத்ராஸ், ஜம்மு காஷ்மீரின் கதுவா, தற்போது குஜராத்தில் நடந்த பலாத்கார சம்பவங்களை மேற்கோள்காட்டி பாஜக அரசை கடுமையாக ராகுல் காந்தி சாடியுள்ளார். 2002 பில்கிஸ் பானோ வழக்கில் கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளிகளை பாஜக அரசு இந்த வாரம் விடுதலை செய்ததை அடுத்து, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசை குறிவைத்து வருகின்றனர்.
இன்று (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ராகுல் காந்தி, "உன்னாவ் - பாஜக எம்எல்ஏவைக் காப்பாற்ற பாடுபட்டார். கதுவா - பலாத்தகாரம் செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்தியது. ஹத்ராஸ் - பலாத்தகாரம் செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு நின்றது. குஜராத் பாலியல் வழக்கு - பலாத்தகாரம் செய்தவர்களுக்கு விடுதலை மற்றும் கவுரவம். குற்றவாளிகளை ஆதரிப்பது. இது பெண்களை குறித்து பாஜகவின் அற்ப மனநிலையை காட்டுகிறது. இப்படிப்பட்ட செயலுக்கு வெட்கமில்லை பிரதமரே? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்
பில்கிஸ் பானோ கொலை மற்றும் பலாத்கார வழக்கில் கைதானவர்களின் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்றும் (புதன்கிழமை) விமர்சித்தார். நேற்று அவர் பகிர்ந்த டிவிட்டில், "5 மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்து, 3 வயது சிறுமியை கொன்றவர்களை, 'ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ்' விழாவின் போது விடுதலை செய்யப்பட்டனர் என பாஜக அரசை விமர்சித்திருந்தார். பெண்கள் சக்தி பற்றி பேசும் நீங்கள் நாட்டில் வாழும் பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது." எனக் கடுமையாக சாடியிருந்தார்.
2002 குஜராத் கலவரத்தின் போது, கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானோ கற்பழிக்கப்பட்டார். அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் அவரது மூன்று வயது மகளும் அடங்குவார். இந்த வழக்கில் 11 பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. பின்னர் அவரது தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பாஜக தலைமையிலான குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையின் கீழ் பில்கிஸ் பானோ மீதான கூட்டுப் பலாத்காரம் மற்றும் பானோவின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 11 குற்றவாளிகளை விடுதலை செய்ய குஜராத் அரசு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 15 அன்று கோத்ரா துணைச் சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ