தேசிய பாதுகாப்பு குறித்து தன்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்சியில் உரையாற்றிய போது பிரதமர் மோடியை ஒரே மேடையில் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் RSS அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். RSS அமைப்பின் முகமாக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.


மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அனைத்து அமைப்புகளிலும் RSS தலையீடு உள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், பல்வேறு அமைப்புகளை காப்பாற்றி உள்ளது எனவும் தெரிவித்தார்.


மேலும், பல்வேறு அமைப்புகளில் வேலை செய்யும் RSS தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள் எனவும், இந்தியாவில் அனைத்து மதங்களும் மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், பிற மதங்களை சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.


தேசத்தை விட தாங்கள் தான் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது. இன்னும் 3 மாதங்களில் நாடே உயர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எதிர்வரும் லோக்சபா தேர்தலை பார்த்து பிரதமருக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. மோடி என்கிற இமேஜ் முடிவுக்கு வந்து விட்டது, தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.