ரபேல் போர் விமானம்: வாழ்த்துக்கூறி கேள்வி எழுப்பிய ராகுல்.. பதில் சொல்லுமா மோடி அரசு
இன்று இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள் குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில் வாழ்த்து கூறியதோடு, மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
புது டெல்லி: இந்தியாவில் 5 போர் விமானங்களின் வரவேற்புக்கு மத்தியில் மீண்டும் அரசியல் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமானத்தை வாங்கிய இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்த, அதே வேளையில், மீண்டும் மோடி (Modi Govt) அரசாங்கத்திடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளார்.
இதேபோல 2019 தேர்தலுக்கு முன்னர், ராகுல் காந்தி இதே கேள்விகளை மீண்டும் மீண்டும் கூறி, ரஃபேல் (Rafale) ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அப்பொழுது அவர் "சவுகிதர் சோர் ஹை" (நாட்டின் காவலன் ஒரு திருடன்) என்ற முழக்கத்தை கையில் எடுத்தார். ஆனால் அவரின் முழக்கத்தை பிரதமர் மோடியின் "நானும் காவலன் என்ற கோஷம்" அதை மறைத்தது.
இன்று இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள் குறித்து ராகுல் காந்தி (Rahul Gandhi) ட்வீட் செய்துள்ளார். அதில் வாழ்த்து கூறியதோடு, மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் கூறியது, "ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய இந்திய விமானப்படைக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் மத்திய அரசு எனது மூன்று கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
முதல் கேள்வி: 526 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை எதற்காக ஆயிரத்து 670 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளீர்கள்?
இரண்டாவது கேள்வி: 126 விமானங்களுக்கு பதிலாக ஏன் வெறும் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டுள்ளது
மூன்றாவது கேள்வி: எச் ஏ எல் அமைப்பதற்கு பதிலாக வங்கி மோசடியில் ஈடுபட்ட அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பிலான இந்த காண்ட்ராக்ட் ஏன் கொடுத்தீர்கள்?
என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ALSO READ | இது வெறும் ஆரம்பம் தான்: மோடி அரசை இடைவிடாது தாக்கும் ராகுல்..!
முன்னதாக, ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வந்ததை காங்கிரஸ் வரவேற்றதுடன், 526 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை ஏன் ரூ .1670 கோடிக்கு வாங்கியது என்று ஒவ்வொரு தேசபக்தரும் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “இந்தியாவில் ரஃபேல் வருக! விமானப்படை போராளிகளுக்கு வாழ்த்துக்கள். "இன்று ஒவ்வொரு தேசபக்தரும் ரூ .56 கோடி ரஃபேல் விமானம், இப்போது ரூ .1670 கோடியில் ஏன் என கேட்க வேண்டும்? 126 ரஃபேலுக்கு பதிலாக 36 ரஃபேல் மட்டும் ஏன்? மேக் இன் இந்தியாவுக்கு பதிலாக பிரான்சில் மேக் இன் ஏன்? 5 ஆண்டுகள் தாமதம் ஏன்? போன்ற கேள்விகளை கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரஃபேல் இந்தியா விமானத்தின் முதல் தொகுதி பிரான்சிலிருந்து இந்தியாவை அடைந்துள்ளது. இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தரையிறங்கின. விமானம் திங்கள்கிழமை பிரான்சிலிருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Rafale Updates: இந்தியாவை அடைந்த ரஃபேல் போர் விமானம்; 144 தடை உத்தரவு