Rahul Gandhi: அவதூறு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை மே 3! வீட்டை காலி செய்வாரா ராகுல்?
Rahul Gandhi Defamation Case: ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும்
நியூடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சூரத் நீதிமன்றத்தில் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்மையில் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது.
தண்டனையைத் தொடர்ந்து உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி வசித்து வந்த அரசு வீட்டையும் காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ராகுல் காந்தி 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீடு காலி செய்ய சொல்வதற்கு காரணம், அவருடைய பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தான்.
ராகுல்காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே, அவருக்கு ஜாமீன் வழங்கிய சூரத் நீதிமன்றம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்திருந்தார்.
மேலும் படிக்க | அவதூறு வழக்கில் நாளை மேல்முறையீடு செய்யும் ராகுல்காந்தி: இடைக்கால தடை கேட்க முடிவு
மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்யக்கோரும் இந்த மேலுமுறையீட்டு வழக்கு, மே 3ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சூரத் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தற்போதைய எம்பி பதவி வகிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு தகுதியில்லை என்பதோடு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அரசியல் நிபுணர்கள் ஐயம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ராகுல் காந்தியின் தண்டனை ரத்து செய்யப்பட்டால், ராகுல் காந்தியின் பதவி தகுதி நீக்கமும் முடிவுக்கு வந்துவிடும். அப்போது, அவர் கடந்த 20 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டில் இருந்து காலி செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்காது.
2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, கர்நாடகா மாநில பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார். இது ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறு செய்வதாகக் கூறி, பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியிருக்கிறது.
அதானி விவகாரத்தை பேசக்கூடாது என்பதற்காக ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க | பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ