பிரதமர் மோடி அவர்களே... இந்த நாட்டில் பெட்ரோல் விலை எவ்வளவு இருக்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி
`மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை கலைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசாங்கம் சர்வதேச கச்சா எண்ணெய் 35% வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை கவனிக்க தவறிவிட்டது.
புதுடெல்லி: மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசியலில் பிஸியாக இருக்கும் மத்திய அரசை நாட்டின் பொருளாதரத்தை உயர்த்த "பெட்ரோல்" (Petrol) விலையை குறைக்கப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னால் காங்கிரஸ் (Congress) கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா (Jyotiraditya Scindia) பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Modi) ட்வீட் செய்து, "பெட்ரோல் விலை குறைப்பதை முதலில் கவனியுங்கள் என்று கூறியுள்ளார்.
60 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்...
@PMOIndia டேக் செய்து ராகுல் காந்தி (Rahul Gandhi) ட்விட்டரில் கூறியது, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை நிலைத்தன்மை இல்லாததாக மாற்றும் வேளையில் மும்முரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசாங்கம் சர்வதேச கச்சா எண்ணெய் (Crude Oil) விலையில் 35% வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை கவனிக்க தவறிவிட்டது.
பெட்ரோல் விலையை (Petrol Price) லிட்டருக்கு 60 ரூபாயாக குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்கும் நன்மையை தயவுசெய்து வழங்க முடியுமா? இது ஸ்தம்பித்த பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தண்ணீரை விட கச்சா எண்ணெய்யின் விலை மலிவானது. விலை 30 சதவீதம் குறைந்துள்ளது.
5-6 ரூபாய் வரை குறையக்கூடும்:
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் (Crude Oil) விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதன் விளைவை உள்நாட்டு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வரும் நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் ஒரு பெரிய மாற்றத்தை காணலாம்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை இந்தியா பெறும் என்று பல வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா ரூபாய் மதிப்பு பலவீனமாக உள்ளது. எனவே, பெட்ரோல் மற்றும் டீசலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை.