ராகுல் பொய் கருத்துகளை பரப்புவதில் வல்லவர் -ஸ்மிரிதி இரானி!
ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்!
ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மருமகன் ராபர்ட் வதேரா சமீபத்தில் பணமோசடி வழக்கில் சிக்கினார். இதனையடுத்து ராபர்ட் வதேராவின் உதவியாளரை ஜாமீனில் வெளி வரமுடியாத விதத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி இதுகுறித்து தெரிவிக்கையில் “ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோராவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. எனவே நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேரா தனது உதவியாளர் மனோஜ் அரோராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதை உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார். தற்போது ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பாஜக கட்சியினரிடையே காரசார விவாதங்கள் எழுந்துவரும் நிலையில், ராகுலின் கருத்துகள் குறித்து விமர்சித்து பேசிய ஸ்மிரிதி, ரபேல் விவகாரத்தில் பொய் கூறுவது ராகுல் காந்தி தான். போய்களின் பிறப்பிடன் காங்கிரஸ் கட்சியினர் தான் என்பதை ராகுல் காந்தி தான் என குறிப்பிட்டு பேசிய அவர், ராபர்ட் வதேராவின் வழக்கு குறித்து ராகுல் ஏன் கருத்து தெரிவிக்காமல் இருக்கின்றார் எனவும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர்., “நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த ரபேல் விவாதத்தின்போது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது ராகுல்காந்தி கண் சிமிட்டியது ஒரு பெண் அமைச்சரின் உணர்வுகளை காயப்படுத்துவது போலை அமைந்துள்ளது. மேலும் இது சபையின் கண்ணியத்தை அவமதிப்பது போலவும் உள்ளது” இதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.