மக்களவையில் நேற்று இடைக்கால மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 65,587 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-20-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதி அமைச்சரும் (பொறுப்பு), ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 64,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


அதேசமயம் ஆள் இல்லா ரயில்வே கிராசிங் முறை ஒழிக்கப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று இடைக்கால மத்திய பட்ஜெட்டில் தெரிவித்தார்.


மேலும் மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும் என்றும், வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ரயில்களில் உலகத் தரம் வாய்ந்த சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


அதேபோன்று, சென்னை ICF-ல் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில், டெல்லி  முதல் வாரணாசி வரை இயக்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று இடைக்கால மத்திய பட்ஜெட்டில் தெரிவித்தார்.