Rain Alert: தத்தளிக்கும் தலைநகரம், தவிக்கும் மக்கள், விழிக்கும் அரசாங்கம்!!
நாட்டின் தலைநகரான தில்லியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஞாயிறன்று இந்த பருவத்திற்கான முதல் கன மழை பொழிந்தது.
நாடு முழுவதும் பருவமழை துவங்கிவிட்ட நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வழக்கத்தைப் போலவே மகாராஷ்டிரா, மும்பையில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
நாட்டின் தலைநகரான தில்லியில் (Delhi) கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஞாயிறன்று இந்த பருவத்திற்கான முதல் கன மழை பொழிந்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் சாலைகளில் சிக்கிகொண்டனர். பல வாகனங்கள் சாலையில் தேங்கிய நீரில் (Water logging) மூழ்கின. அன்று பெய்த மழையில், தில்லியின் பல்வேறு இடங்களில் நால்வர் உயிர் இழந்தனர்.
நேற்று அதாவது திங்களன்றும் தில்லி முழுவதும் பரவலாக பல இடங்களில் கன மழை பெய்தது. பல முக்கிய சலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
இன்றும் தில்லி (Delhi) முழுவதும் கன மழை பெய்து வருகிறது. பொதுவாக நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், தில்லியில் மழையின் அளவு குறைவாகத் தான் இருக்கும். ஆனால், இந்த குறைந்த அளவு மழையைத் தாங்கும் திறன் கூட தில்லிக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். சில மணி நேர மழை கூட தலைநகரை திக்குமுக்காட வைத்து விடுகிறது. வழக்கத்தைப் போலவே மழையும் அரசியலுக்கே வழி வகுக்கிறது. கட்சிகள் ஒருவரை ஒருவர் பழி போடுவதில் குறியாக இருக்கின்றன. பழி போடும் படலம் முடிவதற்குள் மழையும் நின்று விடுகிறது. பின்னர் அடுத்த மழையிலும் அதே நிலை தொடர்கிறது. ஞாயிறன்று பெய்த மழைக்குப் பிறகு தில்லியின் நிலை குறித்து கௌதம் கம்பீர் அரசாங்கத்தின் மீது கேள்வி எழுப்பினார்.
தற்போது தில்லியில் பெய்து வரும் கன மழையால் வழக்கம் போல் பொது மக்களே பாதிப்புக்கு உள்ளாகி இருகிறார்கள். அலுவலகம் செல்லவும், மேலும் பல காரணாங்களுக்காகவும் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் சாலைகளில் செய்வதறியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
தில்லி மற்றும் தில்லி அருகில் உள்ள பகுதிகளான குருகிராம், நோய்டா, ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் புதன்கிழமை மாலை வரை மிதமான அல்லது கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்தது.
ALSO READ: நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!!