தமிழகத்தில் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதிகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் 29ம் தேதியோடு முடிவடைகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவைப் பதவிகளின் காலமும் ஜூன் 29ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது. தற்போது அதற்கான தேதியை அறிவித்துள்ளது. காலியாகப் போகும் 57 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முட்டாள்த்தனமானது - சீமான்


பொதுவாக, மாநிலங்களவை எம்.பி பதவி, எம்.எல்.ஏ.க்கள் பலத்தில்தான் பிடிக்க முடியும். ஒரு எம்.பி. பதவியைப் பெற வேண்டுமென்றால், 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது விதி. தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன்மூலம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியால் 4 எம்.பி பதவிகளை வெல்ல முடியும். அதேபோல், அதிமுக - பாஜகவுக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, இக்கூட்டணியால் 2 எம்.பி. பதவிகளை வெல்ல முடியும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு எம்.பி பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டதால், வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்.பி. பதவிகளைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், சமீபத்தில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸுக்கு ஒரு எம்.பி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம் என்று தெரிவித்திருந்தார். எனவே, கூட்டணி தர்மம் கருதி காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை திமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதற்கு வாய்ப்பே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR