ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முட்டாள்த்தனமானது - சீமான்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள் - சீமான் 

Last Updated : Mar 14, 2022, 03:21 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முட்டாள்த்தனமானது  - சீமான்  title=

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள் - சீமான் 

குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை வளசரவாகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மலர் மரியாதை செய்தும், வீரவணக்கம் செலுத்தினார். 

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், குறிஞ்சாங்குளத்தில் காந்தாரி அம்மன் வழிபாட்டு உரிமைக்காக இன்னுயிர் ஈத்தவர்களுக்கு மரியாதை செலுத்தியதாகவும், மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அவர்கள் அடக்கி ஒடுக்கி இந்த பிரச்சனையை மூட நினைக்கிறார்களே தவிர ஒரு தீர்வு கிடைக்காமல் உள்ளது என்றார்.

இதுகுறித்து இரு சமூகத்தாரையும் அழைத்து பேச வேண்டும் என்றும், தமிழக அரசு காந்தாரியம்மன் கோயில் கட்ட உரிய நிலம் ஒதுக்கி வழிபாடு நடத்த வழிவகை செய்து தர வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்தார். 

மேலும் படிக்க | தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கின

அதேபோல் மூத்த அரசியல் வாதியாக இருக்க கூடிய மதிமுக பொது செயலாளர் வைகோ இந்த பிரச்சினையில் தலையிட்டால் நல்லது, அவரது சொந்த நிலத்தில் இந்த பிரச்சினை இருப்பதால் அவர் தலையிடுவார் என நம்புகிறோம் எனக் கூறினார்.

தொடர்ந்து ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள கேள்விக்கு, நாய்க்கு ரொட்டி துண்டுகளை தூக்கி போடுவது போல் இந்த ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை எங்களுக்கு தூக்கி போட்டு, போராட்டம் நடத்தி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

அதேபோல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தினால் செலவுகள் குறையும் என்று கூறும் இவர்கள், மேற்கு வங்கத்தில் மாநில தேர்தலை 13 கட்டமாக ஏன் நடத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பிய சீமான், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தோற்கடிக்கும் அவ்வாறு நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு வைத்தார்.

அதுமட்டுமின்றி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்றார். மேலும் இந்தியா ஓரே நாடு கிடையாது. Union of States தான். அரசியலமைப்பு சாசனம் அதை தான் சொல்கிறது என்றார்.

மேலும் படிக்க | லிஃப்டுக்குள் 2 மணி நேரம் சிக்கிய பயணிகள்!! திக் திக் நிமிடங்கள்

நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், செயல்படுத்தியது பாஜக என்று கூறிய சீமான், நீட் தேர்வு எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கும்? அப்போது நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவர்கள் ஆனவர்கள் எல்லாம் தரம் இல்லாத மருத்துவர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி 11, 12ம் வகுப்பு தேர்வுகள் எதற்கு நேரிடையாக நீட் தேர்வு வைத்து அதற்கான பாட திட்டங்களை நடத்த வேண்டியது தானே எனக் கூறினார். 

தொடர்ந்து பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுனர் குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டார் என்றும், மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் அனைத்தையும், நீதிமன்றம் எடுத்து சென்று நீதிபதிகள் உத்தரவு மூலம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதேபோல், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற அண்ணாமலையின் நம்பிக்கையை நான் வாழ்த்துகிறேன் என்று சீமான் தெரிவித்தார்.

மேலும் படிக்க |  Engineering படிக்க இனி 12 ஆம் வகுப்பில் Maths, Physics கட்டாயமில்லை: AICTE அதிரடி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News