Nirmala Sitharaman, Subrahmanyam Jaishankar: புதுடெல்லி: வரும் மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் நேரடியாக தேர்தலில் போட்டியிடலாம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று (பிரவரி 27, செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். அதன்பிறகு அவர் அந்தக் கருத்தையும் வாபஸ் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கியத் துறைகளில் இருப்பவர்கள் மற்றும் மக்களால் அதிகம் பேசக்கூடிய அமைச்சர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 


இதுவரை நேரடியாக தேர்தலை சந்திக்கவில்லை


நிர்மலா சீதாராமன் மதிதா நிதியமைச்சராகவும், எஸ். ஜெய்சங்கர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் உள்ளனர். இவர்கள் நீண்ட காலமாக மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்தாலும், இதுவரை மக்கள் மன்றத்தில் நின்று நேரடியாக தேர்தலை எதிர்கொள்ளவில்லை.


மேலும் படிக்க - 'அயோத்திக்கு போகாமல்... நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' - புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!


மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நிர்மலா மற்றும் ஜெய்சங்கர் 


இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் இருவரும் தேர்தலில் போட்டியிடப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாகவும், இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தில் போட்டியிடுவார்களா அல்லது வேறு மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார்களா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையை வைத்திருக்கும் ஜோஷி தெரிவித்தார்.


பிடிஐ ஊடகம் வெளியிட்ட செய்தி


லோக்சபா தேர்தலில் அவர்கள் (நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர்) போட்டியிடுவது இறுதியானது. அவர்கள் எங்கிருந்து போட்டியிடுவார்கள்.. கர்நாடகா அல்லது வேறு ஏதேனும் மாநிலமா.. என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று ஜோஷி கூறியதாக பிடிஐ ஊடகம் தெரிவித்துள்ளது


தனது கருத்தை வாபஸ் பெற்ற ,மத்திய அமைச்சர்


அது பெங்களூராக இருக்குமா என்ற கேள்விக்கு ஜோஷி, "எதுவும் இன்னும் முடிவாகாத நிலையில் நான் எப்படி பதில் சொல்ல முடியும்?" என்றார். பின்னர் அந்தக் கருத்தை அவர் வாபஸ் பெற்றார்.


அதன்பிறகு, "நான் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று மட்டுமே கூறினேன், குறிப்பாக (யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை) இது ஒரு தேசிய கட்சி, எங்கள் தலைமை முடிவு செய்யும். நான் அப்படி சொல்லவில்லை" என்று அவர் பிடிஐயிடம் கூறினார்.


மேலும் படிக்க - அதிமுகவினரை போல டெல்லிக்கு தவழ்ந்து போய் வந்தவர்கள் இல்லை -முன்னாள் மாஜி


எந்த மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள்?


தற்போது நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல எஸ்.ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


நிர்மலா சீதாராமன் அரசியல் பயணம்


நிர்மலா சீதாராமன் 2008ல் பாஜகவில் இணைந்தார் மற்றும் 2014 வரை கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமரான பிறகு அவர் இணை அமைச்சரானார். அதே ஆண்டு ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். நிர்மலா சீதாராமன் 2017 முதல் 2019 வரை நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


எஸ்.ஜெய்சங்கர் அரசியல் பயணம்


எஸ்.ஜெய்சங்கர் ஒரு தொழில் தூதர். 2015ல் வெளியுறவு செயலாளராக பணியாற்றினார். 2019 இல், அவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.


மேலும் படிக்க - தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே கொடுக்கல - நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ