நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம்: காரணம் இதுதான்
எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படாதது குறித்து போராட்டம் நடத்துவார்கள்.
புதுடெல்லி: நேற்று மாநிலங்களவையில் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இன்று காலை சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.
கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் (Parliament) மகாத்மா காந்தி சிலை முன்பு மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படாதது குறித்து போராட்டம் நடத்துவார்கள்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை சபையில் நடந்த சம்பவங்கள் குறித்து மத்திய அரசைத் தாக்கினர், இன்சூரன்ஸ் வணிகங்கள் தொடர்பான மசோதா குறித்த விவாதத்தின் போது என்சிபி தலைவர் சரத் பவார், பெண் உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும், எம்.பி.க்களை கட்டுப்படுத்த 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வெளியில் இருந்து மேல் சபைக்குள் அழைத்து வரப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ALSO READ: ராகுல் காந்திக்கு பிறகு, 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
இந்த சம்பவங்களை வருத்தத்தை அளிப்பதாகவும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறிய பவார், தனது 55 வருட நாராளுமன்ற வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தான் பார்த்ததில்லை என்றார்.
காங்கிரஸ் (Congress) தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மார்ஷல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண்கள் உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் கார்கே கூறினார். நாடாளுமன்றத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், இந்த அரசு செயல்படும் விதம் குறித்து கேள்விகள் எழுகின்றன என்றார் அவர்.
சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, 'பேடி பசாவோ, பேடி படாவோ' பற்றி பேசும் அரசு பெண்களின் குரலை நசுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
"பெண் எம்.பி.க்கள் கையாளப்பட்ட விதம் மற்றும் எம்.பி.க்கள் குண்டர்கள் போல் நடத்தப்பட்ட விதம் வேதனையை அளிக்கின்றது. அவர்கள் தள்ளப்பட்டு அமைதியாக இருக்கும்படி அச்சுறுத்தப்பட்டனர். இது வெட்கக்கேடானது. இது எனது முதல் பதவிக்காலம். நான் நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை எழுப்புவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதையும் நசுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. ஒருபுறம், அரசு பேடி பசாவோ, பேடி படாவோ என்று சொல்கிறது, மறுபுறம், அவர்கள் குரலை நசுக்க முயற்சி செய்கிறது” என்று சதுர்வேதியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ கூறியது.
ALSO READ: Rajya sabha: எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் கண்ணீர் மல்கிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR