புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது.
பாஜக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலா இரண்டு எம்.பி.க்கள் மற்றும் ஆர்ஜேடி மற்றும் டிஎம்சியிலிருந்து தலா ஒருவர் என மொத்தம் ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி லேகி, அனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்ட 17 மக்களவை எம்.பி.க்களுக்கு கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுக்பீர் சிங், ஹனுமான் பெனிவால், சுகந்தா மஜும்தார், கோடெட்டி மாதவி, பிரதாப் ராவ் ஜாதவ், ஜனார்தன் சிங், பித்யுத் பரன், பிரதான் பாருவா, என் ரெட்டெப்பா, செல்வம்.ஜி, பிரதாப் ராவ் பாட்டீல், ராம் ஷங்கர் கதேரியா, சத்யபால் சிங் மற்றும் ரோட்மல் நகர் ஆகிய மக்களவை உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவின் 12 எம்.பிக்கள், ஒய்.ஆர்.எஸ் காங்கிரசின் இரண்டு எம்.பி.க்கள், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி கட்சிகளின் தலா ஒரு எம் .பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் கவனத்துடன் திட்டமிடப்பட்டு, பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பல முன்னேப்போதும் எடுக்கப்படாத நடவடிக்கைகள். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை, தனிநபர் இடைவெளியை பின்பற்றும் வகையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் விதமாக, பார்வையாளர் மாடங்கள் உட்பட பல பகுதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிட் -19 நெருக்கடி காரணமாக மக்களவையில் 257 பேரும், மக்களவை கேலரியில் 172 பேரும், மாநிலங்களவையில் 60 பேரும், மாநிலங்களவை கேலரியில் 51 பேரும் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வருகையை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நடவடிக்கைகளை சீராக ஒன்றிணைப்பதற்காக LED திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அறைகள் சுத்திகரிக்கப்படுவது, அமர்வு தொடங்குவதற்கு முன்பு எம்.பிக்கள், கோவிட் -19 க்கான RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் தெரிவித்தார்.
துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் தான் அதற்கான முன்மொழிவை முன்வைக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் கூறியிருந்தார். கோவிட் -19 தொற்றுநோயால் இந்த ஆண்டு மழைக்காலத் கூட்டத்தொடரை நடத்துவது ஒரு சவாலாக இருந்தது, ஆனால் இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் "வரலாற்று சிறப்பு மிக்கது" என்றும் ஓம் பிர்லா கூறியிருந்தார்.
Read Also | Hindi Diwas: உள்ளூர் மொழிகளுடன் சேர்ந்து "இந்தி" பயன்படுத்துமாறு அமித் ஷா வேண்டுகோள்!!
"மழைக்கால அமர்வை நடத்துவது தொற்றுநோய் காலத்தின் போது மிகப் பெரிய சவாலாக இருந்தது, ஆனால் நாங்கள் எங்கள் அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் மக்களுக்கு மேலும் பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று பிர்லா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "இந்த அமர்வு ஒரு வரலாற்று அமர்வாக இருக்கும், ஏனெனில் இது கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெறுகிறது. தொற்றுநோயை அடுத்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அமர்வை நடத்துவதே எங்கள் முயற்சி" என்று அவர் மேலும் கூறினார்.
Zero Hour அரை மணி நேரம் இருக்கும் என்றும் எந்த கேள்வி நேரமும் இருக்காது என்றும் எழுதப்பட்ட கேள்விகளைக் கேட்கலாம், அவற்றுக்கு பதிலளிக்கப்படும் என்றும் பிர்லா கூறியிருந்தார்.