குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12-ம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகெங்கும் புகழ்பெற்ற ராமாயணக் கதையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.  சமஸ்கிருத மொழியில் கவிஞர் காளிதாசர் ராமாயணத்தை ரகுவம்சம் என்னும் பெயரில் கவிதை நூலாக பாடி உள்ளார்.


இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு பள்ளியில் 12-ம் வகுப்புக்கான சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ஆங்கில மொழி பெயர்ப்புடன் அம்மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 106-ம் பக்கத்தில், ராமர் தனது தம்பி லட்சுமணனிடம் ராமரால் கடத்திச் செல்லப்பட்ட சீதை குறித்து தெரிவிப்பது உள்ளத்தை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது என உள்ளது. இது பொதுமக்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் கடும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து குஜராத் மாநில பாடப்புத்தகத்துறை இயக்குனரிடம் கேட்ட போது முதலில் மறுத்த அவர் பின்னர், செய்தியாளர்கள் புத்தகத்தை காட்டிய பிறகு குஜராத்தி மீடியத்தில் இருக்கும் புத்தகத்தில் சரியான தகவல் உள்ளது. ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யும் போது ஒரு சிறு பிழை உண்டாகி விட்டது என தெரிவித்தார்.