சீன (China) ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த நூற்றுக்கணக்கான பரோட்டா மாஸ்டர்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இந்தியா திரும்பி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சீனா திரும்பி செல்லும் நாளை எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டத்தின் புலியூர் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் சுமார் 400 பரோட்டா மாஸ்டர்கள், சீனா சென்று அங்கு பரோட்டா மாஸ்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.


சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் லடாக்கில்(Ladakh) உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan valley) பதற்றம் ஏற்பட்ட நிலையில், அது சீனா திரும்ப வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை பாதிக்கவில்லை.


ALSO READ இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!


தமிழ்நாட்டின் ராமாநாத புரத்தை சேந்த ஹவில்தார் பழனி உட்பட 20 இந்திய வீரர்கள் ஏற்பட்ட சீனா வீரர்கள் நடத்திய வன்முறையில் கொல்லப்பட்டனர்.


2004 ஆம் ஆடு  முதல் சீனாவில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வரும் புலியூரை சேர்ந்த 45 வயது உமாமணி கலிங்கரத்தினம் இதுகுறித்து கூறுகையில், “நான் ஒரு இந்திய குடிமகன். பழனி கொலை செய்யப்பட்டது எனக்கு மனதிற்கு வருத்தமளிக்கிறது அவர் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்திய எல்லையை பாதுகாக்கும் போது இறந்தார். நான் ஒரு இந்திய குடிமகனாக இருந்தாலும், சீனாவின் காரணமாக நான் வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளேன். அதனால் என்னால் சீனாவை கண்டிக்க முடியவில்லை.” என்கிறார்.


தமிழ்நாட்டின் உணவான பரோட்டா சீனாவில் மிக பிரபலமான உணவாக உள்ளது


இது சீனாவின் இந்து சுயி பிங் (Indu Sui Bing) என்று அழைக்கப்படுகிறது. இதை மக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள்.


சுமார் 150 கிராம் எடையுள்ள ஒரு பரோட்டா 200 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இதை இருவர் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார்கள்.


பரோட்டாவில் வாழைப்பழம் அன்னாசி பழம் போன்றவை ஸ்டப் செய்யப்படுகின்றன.அதில் பீனட் பட்டர் (Peanut Butter) போன்ற காய்கறிகள் போன்றவையும் சேர்த்தும் தயாரிக்கப்படுகின்றன.


அசைவ பரோட்டாவும் செய்யப்படுகிறது. இதில் சிக்கன் பீப், போர்க் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதன் விலை 250 ரூபாயாக இருக்கிறது.


சீனாவில் வேலை பார்க்கும் ஒரு பரோட்டா மாஸ்டர், மாதம் ஒன்றுக்கு சுமார் 40,000 முதல் 50,000 வரை சம்பாதிக்கிறார்.


மத்திய அரசு வீ சேட் (WeChat) உட்பட 59 சீன செயலிகளை தடை செய்த போதும், இவர்கள் சீனாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் VPN அதாவது வர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் மூலம் தொடர்பு கொள்கின்றனர். உமாமணியின் மைத்துனர், 32 வயது அனந்த கிருஷ்ணன் என்பவர் இன்னும் சீனாவிலுள்ள ஷான்ஸி (Shaanxi) மாகாணத்ஹ்டில் உள்ள ஜியோன் (xi’an) நகரில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருவதாக  உமாமணி மேலும் தெரிவித்தார்


ALSO READ | கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!!


 


உமாமணியை பணியில் வைத்திருக்கும் சீன முதலாளி மற்றும் அவரது சீன நண்பர்கள், இவர் எப்பாது பணிக்கு திரும்பி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக உமா மணி மேலும் தெரிவித்தார்.


புலியூரை சேர்ந்த மற்றொரு பரோட்டா மாஸ்டர் ஆன 32 வயது மோகன் தாஸ், சுமார் பதினைந்து வருடங்களாக ஷங்காயில் ( Shanghai) பரோட்டா மாஸ்டர் ஆக பணியாற்றி வருகிறார். COVID-19 தொற்று காரணமாக அவரும் திரும்பி வர நேரிட்டது. தற்போது புலியூரில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி மாதத்திற்கு நான்காயிரம் சம்பாதித்து வருகிறார். மோகன்தாஸ் ஷங்காய் சென்றபோது அவர் மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். அது பின்னர் படிப்படியாக அதிகரித்து, ஜனவரி மாதம் கொரோனா தொற்று காரணமாக அவர் திரும்பி வந்தபோது, மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்ததாகக் கூறினார்.


இந்தியா சீனாவிற்கு இடையே பதற்றம் அதிகரித்து வந்த போதிலும், சீனாவில் தங்களை வேலை வைத்திருக்கும் முதலாளிகள் மற்றும் அங்கிருக்கும் நண்பர்கள் தங்களிடம் அன்பாகவே பேசி வருகின்றனர் என்று மோகன் தாஸ் கூறுகிறார்.


ALSO READ | பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்


அரசு கொள்கைகள், சர்வதேச விவகாரங்கள், வர்த்தகம் ஆகியவற்றை பற்றி ஆராயும் அளவிற்கு நாங்கள் நிபுணர்கள் அல்ல. நாங்கள் சீனாவிற்கு திரும்பி சென்று வேலை செய்ய விரும்புகிறோம் என்று அவர் மேலும் கூறுகிறார்.


புலியூரை சேர்ந்த மற்றொரு பரோட்டா மாஸ்டர் ஆன வலம்புரி நாதன், ”நான் இந்தியாவில் லெதர் தொழில்நுட்பம் படித்திருந்தேன். ஆனால் எனக்கு இங்கே வேலை கிடைக்கவில்லை. அபோது சீனா இன்று வேலை தேடினேன், அங்கும் எனது கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. எனக்கு பரோட்டா செய்ய தெரிந்திருந்ததால் பரோட்டா மாஸ்டர் ஆக வேலையில் சேர்ந்தேன். ஒரு மாதத்திற்கு 30,000 முதல் 50,000 ரூபாய் வரை என்னால் சம்பாதிக்க முடிந்தது” என்கிறார்.


”இப்போது நான் சீனா சென்று எனது வேலையை தொடர விரும்புகிறேன். ஏனென்றால், அந்த வேலைக்கு இந்தியாவில் அந்த அளவு பணம் கிடைக்காது என்ற நிலைதான் உள்ளது” என்கிறார்.