தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இதில் சுமார் 36 பேர் பலியாகினர். 300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மீடியாக்கள் தாக்கப்பட்டனர். குற்றவாளி என நிருபிக்கப்பட்ட குர்மித் ராம் ரஹிம் சிங், ஹெலிகாப்டர் மூலம் ரோத்தக் மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதற்கிடையில் கலவரத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய குர்மீத்தின் சொத்தை பறிமுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதனால் கலவரம் ஏற்படாமல் தடுக்க, ஹரியானாவின் பஞ்ச்குலா, சண்டிகர் உட்பட பல நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.


மேலும் சுனாரியா சிறை அமைந்துள்ள ரோதக் நகர் முழுவதும் பல்வேறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ரோதக் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


இன்று சுமார் 2.30 மணி அளவில் தண்டனை வழங்குவது குறித்து வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பி வாதங்களையும் நீதிபதி கேட்டார். இந்நிலையில், தான் செய்த தவறுக்கு நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட குர்மித் ராம் ரஹிம் சிங். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது.


கற்பழிப்பு வழக்கில் குர்மித் ராம் ரஹிம் சிங்கிற்கு 20  வருட சிறை தண்டனை (இரண்டு பெண் வழக்கில் தல 10 வருடம், மற்றும் 30 லட்சம் அபராதம்) வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பிற குற்றவாளியை போன்றே குர்மித் ராம் ரஹிம் சிங் நடத்த வேண்டும். சிறையில் பிற கைதிகள் அணியும் ஆடையே குர்மித் ராம் ரஹிம் சிங்கிற்கு வழங்கப்பட வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது


பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டு, கைதி எண் 1997 வழங்கப்பட்டது.