RBI on Current Account:  வங்கிகளில் உள்ள நடப்பு கணக்குகளை ஒழுங்கு படுத்த ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  சிறு வர்த்தகர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியது. பல சிறு நிறுவனங்களின் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2020 ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட்ட புதிய விதிகளை அமல்படுத்த, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அக்டோபர் இறுதி வரை  கால அவகாசம் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் 


ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, வங்கிகள் லட்சக்கணக்கான நடப்புக் கணக்குகளை மூடிவிட்டன.  இதன் காரணமாக லட்சக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் எம்எஸ்எம்இக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவுறுத்தல்களிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.


தற்போது, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமை அலுவலகம் மற்றும் வட்டார அலுவலகம் / மண்டல அலுவலக அளவில் நடப்பு கணக்குகள் தொடர்பான கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. , வாடிக்கையாளர்கள் எவரும் தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாத வகையில்,  முறையாக கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: 7th Pay Commission முக்கிய செய்தி: டி.ஏ. அரியர் தொகை கிடைக்குமா? கிடைக்காதா?


நடப்பு கணக்குகள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை 


1. வங்கியில் CC/OD (cash-credit/overdraft)வசதியைப் பெறாதவர்கள் நடப்பு கணக்குகளைத் திறக்க எந்த தடையும் இல்லை. ரூ .5 கோடிக்கும் குறைவாக கடன் வைத்திருக்கும் நிறுவங்களுக்கு இது பொருந்தும்.


2. வங்கியிலிருந்தும் CC/OD வசதியைப் பெறாத மற்றும் வங்கியில் ரூ .5 கோடி அல்லது அதற்கு மேல் ஆனால் ரூ .50 கோடிக்கும் குறைவான அளவில் கடன் இருந்தால், CC/OD வசதி இல்லாமல், கலெக்‌ஷனுக்காக மட்டும் நடப்புக் கணக்குகளைத் திறக்க முடியும்.


3. ஏனெனில் நடப்பு கணக்கிலிருந்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்பாடுகளும் சிசிஎஸ்/ஓடி கணக்கிலிருந்து மேற்கொள்ளப்படலாம் என்பதால், சிசிஎஸ்/ஓடி வசதியை பெறுபவரக்ளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும்,  ஏனெனில் சிபிஎஸ் சூழலில் உள்ள வங்கிகள் ஒரு வங்கி- ரொஉ வடிக்கையாளர் பானியை பின்பற்றுகின்றன. அவை ஒரு கிளை-ஒரு-வாடிக்கையாளர் பாணியை பின்பற்றுவதில்லை


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில், விதிகளை அமல்படுத்த வங்கிகளுக்கு 2021 அக்டோபர் 31 வரை அனுமதி அளிக்கப்படும். வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகள் இணைந்து பரஸ்பர திருப்திகரமான தீர்மானங்களை அடைய, இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 


வங்கிகள் தங்களால் தீர்க்க முடியாத இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க, இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (IBA) உரிய வழிகாட்டுதலுக்காக அணுகலாம். எஞ்சிய பிரச்சினைகள், ஏதேனும் இருந்தால், ஒழுங்குமுறை பரிசீலனை தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கியை அணுகி செப்டம்பர் 30, 2021 -க்குள் பரிசீலனை செய்யலாம் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ: 7th Pay Commission: டி.ஏ. உயர்வுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR