ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம்
RBI Hikes Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தார். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கடைசியாக 22 மே 2020 அன்று மாற்றியது.
"பொருட்கள் மற்றும் நிதிச் சந்தைகளில் பற்றாக்குறை மற்றும் நிலையற்ற தன்மை மிகவும் தீவிரமடைந்து வருகின்றன," என்று தாஸ் கூறினார்.
பணவீக்கத்திற்கு எதிரான போரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. ஆண்டின் பெரும்பகுதியில் பணவீக்கம் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் துவங்கியது முதல், அதன் முதல் திட்டமிடப்படாத விகித மாற்றத்தில், ரிசர்வ் வங்கி அதன் மறு கொள்முதல் விகிதத்தை 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்த விகிதம் மிகக்குறைவாக 4 சதவீதமாக நிலையாக வைக்கப்பட்டிருந்தது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை வகுப்பாளர்கள், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் இலக்கின் உச்ச வரம்பை நுகர்வோர் விலைகள் மீறியதால், விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என குறிப்புக்காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், ‘உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தம் தொடர்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் கவலை அளிக்கிறது. போரின் காரணமாக பணவீக்கம் மற்றும் வளர்ச்சியின் கணிப்பு மாறிவிட்டது.’ என கூறினார்.
ரெப்போ விகித உயர்வு: பொதுமக்களுக்கு இதன் விளைவு என்னவாக இருக்கும்?
- ரிசர்வ் வங்கி சார்பில் ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டதால், வங்கிகளின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
- மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளதால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் விகிதங்களை அதிகரிக்கும்.
- வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதன் விளைவு இஎம்ஐ-யில் தெரியும்.
- வீடு, வாகன கடன் வாங்கியவர்கள் முன்பை விட தற்போது அதிக இஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும்.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதால், வங்கிகள் அதிக விகிதத்தில் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்படும். இது வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | RBI Rules: கிழிந்த ரூபாய் நோட்டை எப்படி மாற்றுவது? விதிகளும், வழிமுறைகளும் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR