Padma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்
கலாசாரம், இசை, நடனம், ,அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன
Padma Awards 2021: மத்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து குடியரசு தினத்தை ஒட்டி, சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இவை பொதுவாக பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.
பத்ம விபூஷண் விருது 7 பேருக்கு. பத்ம பூஷண் 10 பேருக்கு, பத்ம ஸ்ரீ 102 பேருக்கு என மொத்தம் 119 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழத்திற்கு மட்டும் 11 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவருக்கு பத்ம விபூஷண் விருது, அதாவது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு அறிவித்தது மத்திய அரசு. அதேபோல பத்ம ஸ்ரீ விருதுகள் பத்து பேருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தமுறை தமிழகத்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்படவில்லை.
கலாசாரம், இசை, நடனம், ,அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக தமிழகத்தை சேர்ந்த மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழு பட்டியல்
ALSO READ | பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR