மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: 7 பலி, 30 பேர் காயம்
மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர்.
மும்பை காட்கோபர் புறநகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உட்பட 12 பேர் பலியானார்கள். இடிந்து விழுந்த அந்த கட்டடத்தில் 12 குடும்பங்கள் குடியிருந்தன.
இந்த வினைத்து இன்று காலை 10.43 மணியளவில் கட்டிடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்து தரை மட்டமானது.
கீழ் தளத்தில் தனியார் மருத்துவமனையும் செயல்பட்டது. சம்பவ இடத்தில் 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்க விரைந்தனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் 30 முதல் 40 வரை இடிபாட்டில் சிக்கியிருந்தனர். இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.