ரிஷிகேஷின் புகழ் பெற்ற லக்ஷ்மன் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷிகேஷில் உள்ள பாரம்பரிய சின்னமான லக்ஷ்மன் ஜூலா-வில் வாகன இயக்கத்தை தடை செய்துள்ளது பொதுப்பணித்துறை. வாகன இயக்கத்திற்கு தடை செய்யபட்டாலும், பாதசாரிகள் குறைந்த எண்ணிக்கையில், பாலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


96 வயதான பாலத்தை மூடுவதற்கான முடிவு உள்ளூர் நிர்வாகத்தால் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. பாலத்தின் நிலை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகப்புகாரனமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


லக்ஷ்மன் ஜூலா என்பது கங்கை ஆற்றின் மீது 1923 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 450 அடி நீள இரும்பு சஸ்பென்ஷன் பாலமாகும். இது நகரின் அடையாளங்களில் ஒன்றாகும். புராணங்களின்படி, ராமரின் சகோதரர் லக்ஷ்மன் தற்போது பாலம் கட்டப்பட்ட இடத்தில் சணல் கயிறுகளில் ஆற்றைக் கடந்தார் என்பது புராணக்கதை.


சனிக்கிழமையன்று, உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விரைவில் மாற்று பாலம் கட்டப்படும் என்றார். அதே நேரத்தில் தனது அரசாங்கம் ரிஷிகேஷின் சின்னமான பாலத்தை பாதுகாக்க முயற்சிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியது.