புது டெல்லி: 2019 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 4,37,396 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 1,54,732 பேர் மரணமடைந்து உள்ளனர். மேலும் 4,39,262 பேர் காயமடைந்தனர் என்று சமீபத்திய தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி -National Crime Records Bureau) தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், சாலை விபத்துக்களில் பெரும்பான்மையானவை (59.6 சதவீதம்) "அதிவேகமாக" ஓட்டி சென்றதால் 86,241 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,71,581 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


2018 ஆம் ஆண்டில், சாலை விபத்தில் (Road Accidents in India) இந்தியாவில் 1,52,780 பேர் இறந்துள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் இந்த புள்ளிவிவரங்கள் 1,50,093 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக, 2019 ஆம் ஆண்டில், இயற்கை பேரிடர் மூலம் (மழை, மரம் சாய்வது) மற்றும் கவனக்குறைவான மனித நடத்தை (சாலையை கடக்கும் போது) போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏற்பட்ட சாலை விபத்துக்களால் 4,21,959 பேர் இறந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது, இது 2018 இல் 4,11,104 மற்றும் 2017 இல் 3,96,584 ஆக இருந்தது.


ALSO READ  | கமல்ஹாசனின் இந்தியன் 2 செட்டில் கிரேன் விபத்துக்குள்ளானதில் 3 உதவி இயக்குநர்கள் பலி


புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் இரு சக்கர வாகனங்களில் செல்வோர். லாரிகள், கார்கள் மற்றும் பேருந்துகள் முறையே 14.6 சதவீதம், 13.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் விபத்து நடந்துள்ளது.


சாலை விபத்துக்களில் 2.6 சதவீதம் மட்டுமே மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ளது. ஆபத்தான அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் அல்லது முந்திச்செல்வது (Careless and Overtaking Driving) மூலம் 25.7 சதவீத சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனூலம் மட்டும் 42,557 இறப்புகளுக்கும் 1,06,555 பேருக்கு காயங்கள் ஏற்பட வழிவகுத்தது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி. (NCRB) அறிக்கையில் கூறியுள்ளது. 


59.5 சதவீதம் கிராமப்புறங்களில் (2,60,379 வழக்குகள்), நகர்ப்புறங்களில் 40.5 சதவீதத்திலும் (1,77,017 வழக்குகள்) பதிவாகியுள்ளதாகவும், 4,37,396 பேரில் 29.9 சதவீதம் (1,30,943 வழக்குகள்) பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


என்.சி.ஆர்.பி அதன் ஆண்டுதோறும் வெளியிடப்பட்ட தரவுகளில் ரயில் மற்றும் ரயில்வே கடக்கும் விபத்துகளையும் உள்ளடக்கியது.


ALSO READ  | மனித நேயத்தை படுகொலை செய்த செல்ஃபி மோகம் -See Inside!


2019 ஆம் ஆண்டில் மொத்தம் 27,987 ரயில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் 3,569 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 24,619 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


முந்தைய ஆண்டு மொத்தம் 1,788 ரயில்வே கிராசிங் விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதனால் 1,762 பேர் உயிரிழந்தனர் மற்றும் 165 பேர் காயமடைந்தனர்.