நாடு முழுவதும் ஒரே விதமான சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தியது மத்திய அரசு. இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்ததும், ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 94,063 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 90,669 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.92 கோடி கிடைத்துள்ளதாகவும், 42.91 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- 


மொத்த ஜி.எஸ்.டி. ரூ.48,948 கோடி கிடைத்துள்ளது. அதில் மத்திய ஜி.எஸ்.டி.யாக ரூ.14,042 கோடியும், மாநில ஜி.எஸ்.டி.யாக ரூ.21,172 கோடியும் அடங்கும். செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.92 கோடி கிடைத்துள்ளதாகவும், 42.91 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.