புதுடெல்லி: முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று (வியாழக்கிழமை) இந்தியாவில் தடுப்புக்காவல் நிலையங்கள் இல்லை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு தழுவிய அளவில் அமல்படத்தப்படாது எனக்கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து தொடர்பாக பதில் அளித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி கூறுவதெல்லாம் "பொய்" எனவும் ஹேஷ்டேக் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராமலீலா மைதானத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் - சில நகர்ப்புற நக்சல்களும் - அனைத்து முஸ்லிம்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்திகளை பரப்புகிறார்கள். நாட்டில் உள்ள முஸ்லிம்களை யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பமாட்டார்கள் மற்றும் இந்தியாவில் எந்த தடுப்புக்காவல் மையங்களும் (Detention Centre) இல்லை. தடுப்புக்காவல் மையங்கள் இருப்பதாகக் கூறுவது உண்மை இல்லை. முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை. CAB மற்றும் NRC ஆகியவை நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பொருந்தாது” என்று பிரதமர் மோடி ராம்லீலா மைதானத்தில் நடந்த மெகா பேரணியில் கூறியிருந்தார்.


தடுப்புக்காவல் மையம் குறித்து பிரதமர் பேசியதற்கு, முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் (RSS) பிரதமர் பாரத மாதாவிடம் (இந்தியா) பொய் சொல்கிறார் எனப் பதிவிட்டு, ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் தடுப்புக்காவல் மையம் கட்டப்பட்டு வருவது காட்டப்படுகிறது. மேலும் தனது பதிவில் #JhootJhootJhoot (பொய்,பொய்,பொய்) என மூன்று தரம் குறிப்பிட்டு ஹேஷ்டேக் செய்திருக்கிறார். 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.