புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 9, 2021) கடல்சார் பாதுகாப்பு குறித்த UNSC உயர்மட்ட விவாதத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி (PM Modi), தனது உரையில் கடல்சார் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான 5 அடிப்படை கொள்கைகளையும் முன்வைத்தார். தடையற்ற கடல் வணிகம், பொறுப்புகளுடன் கூடிய கடல்வழி தொடர்பை ஊக்குவித்தல், கடல்சார் பிரச்சனைகளை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியாக பேசி தீர்ப்பது, கடல்சார் போக்குவரத்தில் உள்ள அச்சுறுத்தல்களை கூட்டாக முடிவுக்கு கொண்டு வருவது, கடல்சார் வளங்களை பாதுகாப்பது ஆகியவை கடல்சார் பாதுகாப்பிற்கான அடிப்படை கொள்கைகள் என அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தின் போது, ​​ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியிடம், சர்வதேச அரங்கில் பாரம்பரியமாக இந்தியா ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கிற்கு ஏற்ப, பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகள் உள்ளது என்று பாராட்டினார்.


ALSO READ | ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை


"ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் ஒருவர் என்ற முறையில், இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான தலைப்பான, கடல்சார் பாதுகாப்பில் உள்ள நவீன சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த உங்களது விவாதத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். உங்களது முயற்சி, சர்வதேச அரங்கில் இந்தியா பாரம்பரியமாக ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கிற்கு ஏற்ப உள்ளது, இதனால் பன்முகத்தன்மையுடன், பரஸ்பர நலன் மற்றும் சமமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் சிறந்த பங்கை ஆற்றியுள்ளீர்கள்"என்று புடின் கூறினார்.


ரஷ்ய கூட்டமைப்பு கடல் சார் குற்றங்களை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்கொள்ளும் பணியை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது என்பதையும், இந்த பகுதியில் சமமான சர்வதேச ஒத்துழைப்பின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க ரஷ்யா தயாராக இருப்பதையும் புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தினார்.


ALSO READ | பிரதம மந்திரி ஏழை நல்வாழ்வு உணவு திட்ட பயனாளிகளுடன் இன்று பிரதமர் உரையாடல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR