ரஷ்யா-உக்ரைன் போர்: சமையல் எண்ணெய் விலை அதிகரிக்குமா..!!
உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தியா உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் இதர சமையல் எண்ணெய்கள் விநியோகத்தின் நிலைமை குறித்து கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதன்போது, கடந்த நாட்களில் சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விநியோக தடைகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நிவாரண செய்தி வந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு சூரியகாந்தி மற்றும் இதர சமையல் எண்ணெய்கள் விநியோகம் தடைபடாது என சமையல் எண்ணெய் தொழில்துறை சார்பில் அரசுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க | PPF கணக்கு விதிகளில் பெரிய மாற்றம்: அறியாமல் போனால் நஷ்டம் உங்களுக்கு
எண்ணெய் விலை வீழ்ச்சி
உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் இதர சமையல் எண்ணெய்கள் விநியோகத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தொழில்துறையில் இருந்து வரும் சமையல் எண்ணெய் விலையில் குறைந்து வரும் போக்கு குறித்தும் அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய் விலை குறையலாம்
புதிய கடுகு விளைச்சல் சந்தைக்கு வருவதால், எண்ணெய் சில்லரை விலை குறைய வாய்ப்புள்ளது என்றார். இந்த சந்திப்பின் போது, சூரியகாந்தி எண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என சமையல் எண்ணெய் தொழில்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் டெலிவரிக்கான 1.5 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் முதல் சரக்கு உக்ரைனில் இருந்து போருக்கு முன் அனுப்பப்பட்டது, விரைவில் மேலும் எண்ணெய் அனுபப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதம் ஒன்றுக்கு 18 லட்சம் டன் எண்ணெய்
நாடு மாதந்தோறும் 18 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவை உள்ளது. இதில் சூரியகாந்தி எண்ணெயின் பங்கு 1.5-2 லட்சம் டன்கள். நாட்டில் சூரியகாந்தி எண்ணெய்க்கு மாற்றாக, கடலை எண்ணெய், கடுகு மற்றும் சோயாபீன் எண்ணெய் இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால் தாமதமாகிறதா வெளியீடு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR