பிபிஎஃப் கணக்கு புதிய விதி: நீங்களும் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்பவராக இருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும். பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு முக்கிய விதி பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. முதலீட்டாளர்கள் மீது இதன் நேரடியான தாக்கம் இருக்கும்.
அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது
டிசம்பர் 12, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு ஒரே நபரால் தொடங்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளை இணைக்க முடியாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தால் அலுவலக குறிப்பாணையும் (OM) வெளியிடப்பட்டுள்ளது.
2019 விதிகள் மேற்கோள் காட்டப்பட்டன
பிபிஎஃப் கணக்குகளை இயக்கும் நிறுவனங்கள் டிசம்பர் 12 அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட பிபிஎஃப் கணக்குகளை இணைப்பதற்கான கோரிக்கைகளை அனுப்பக் கூடாது என்று அலுவலக குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, பிபிஎஃப்-ன் 2019 ஆம் ஆண்டின் விதிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம்
ஒரே ஒரு கணக்கு மட்டும் செயலில் இருக்கும்
அலுவலக குறிப்பாணை வெளியான பிறகு, தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டிசம்பர் 12, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிஎஃப் கணக்குகளில், ஒரு கணக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்குகள் மூடப்படும். மூடப்படும் எந்தக் கணக்கிற்கும் வட்டி செலுத்தப்படாது.
உதாரணம் மூலம் புரிந்து கொள்ளுங்கள்
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஜனவரி 2014 இல் ஒரு பிபிஎஃப் கணக்கையும், பிப்ரவரி 2020 இல் மற்றொரு கணக்கையும் திறந்ததாக வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், விதியின் படி, பிப்ரவரி 2020க்கான உங்கள் பிபிஎஃப் கணக்கு மூடப்படும். இந்தக் கணக்கில் வட்டி கிடைக்காது.
இதேபோல், நீங்கள் ஜனவரி 2014 இல் முதல் கணக்கையும், பிப்ரவரி 2017 இல் இரண்டாவது கணக்கையும் திறந்திருந்தால், உங்கள் கோரிக்கையின் பேரில் இவை இரண்டும் இணைக்கப்படும்.
மேலும் படிக்க | முதலீடு இரட்டிப்பாகும், வருமான வரி விலக்கு, சூப்பர் ரிட்டர்ன்: PPF-ல் பல நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR