எல்ஐசி ஐபிஓ புதுப்பிப்பு: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு, எல்ஐசியின் ஐபிஓ குறித்து பெரிய அப்டேட் வந்துள்ளது. போரைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, ஐபிஓ வெளியீடு குறித்து சற்று யோசித்து முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி ஐபிஓ: முதலில் மார்ச் இறுதியில் வெளியிடும் திட்டம் இருந்தது
சந்தை ஏற்ற இறக்கம் சாதாரணமாக இருந்தால், ஐபிஓ ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று எல்ஐசி ஐபிஓ-வுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. முன்னதாக மார்ச் இறுதிக்குள் இதைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு இடையில், உலக அளவில் சந்தைகளில் ஸ்திரமற்ற தன்மை நிலவவே, எல் ஐ சி ஐபிஓ-வை வெளியிடுவதற்கு முன் அரசாங்கம் பல கோணங்களில் பரிசீலித்து வருகிறது.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்
எல்ஐசி ஐபிஓ: லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்
எல்ஐசி அதிகாரிகள் மற்றும் வங்கியாளர்கள் ஐபிஓ-ஐ ஏப்ரலில் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எல்ஐசி-யின் இந்த ஐபிஓ எப்போது வரும் என கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று நம்பப்படுகிறது.
எல்ஐசி ஐபிஓ: வெளியீடு குறித்து நிதியமைச்சரும் சுட்டிக்காட்டியிருந்தார்
இதற்கு முன்பே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐபிஓ தாமதமாகக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். எனினும், இது குறித்து இதுவரை அரசு தரப்பிலும், எல்.ஐ.சி. தரப்பிலும் எந்த வித அதிகாரப்பூர அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த எல்ஐசிஐபிஓ மூலம் அரசு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி: நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR