உலகத்தில்  ஒன்றரை வருடம் முன்னால் ஆரம்பித்த கொரோனா தாண்டவம் இன்னும் நிற்கவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை என தொடங்கி, மூன்றாவது அலையும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உலகம் தவிக்கிறது. இந்த கொரோனா காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதால் சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவலை (Corona Virus) தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், இந்தியா உட்பட பல நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தடுப்பூசியை  வழங்கும் அதே நேரத்தில் சுற்றுலா துறையையும் மேம்படுத்த, ரஷ்யா ஒரு நூதனமான தடுப்பூசி சுற்றுலா (Vaccine Tourism) திட்டத்தை தயாரித்துள்ளது. மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி தேவையும் அதிகம் உள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


துபாயை தளமாகக் கொண்ட சுற்றுலா பயணத்தை திட்டமிடும் நிறுவனம், தில்லியில் இருந்து மாஸ்கோவிற்கான 24 நாள் பயண பேக்கேஜ் திட்டத்தை தயாரித்துள்ளது. அதன் கீழ், ஒரே கல்லில் இர்ஃஅண்டு மாங்காய் என்ற வகையில் ரஷ்யாவுக்கான அவர்களது பயணத்தில் அவர்களுக்கு ஸ்புட்னிக் வி (Spurnik V) தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் போடப்பட்டு, அதற்கான சான்றிதழும் கிடைக்கும். சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையில், ரஷ்யாவில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்கும் வகையில் 20 நாள் சுற்றுலாவுக்கான பேக்கேஜும்  இதில் அடங்கும். ரூ 1.29 லட்சம் என்ற கட்டணத்தில், ரஷ்யாவிற்கான பயண செலவுகள் அனைத்தும் அடங்குவதோடு, தடுப்பூசிகளுக்கான செலவும் அடங்கும்.

இந்தியர்கள் இந்த சுற்றுலாவை மேற்கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என இந்த சுற்றுலாவிற்கான திட்டத்தை வகுத்துள்ள சுற்றுலா பயண திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், “மே 29 க்கு புறப்பட வேண்டிய பயண திட்டத்தில், சுமார் 28 பயணிகள் இதில்  பதிவு செய்துள்ளனர். ஜூன் 7 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளிலும் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.


ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; ₹190 கோடி லாட்டரி பரிசு டிக்கெட் தொலைந்த சோகம்

இந்த சுற்றுலா பேக்கேஜில், தில்லி-மாஸ்கோ-டெல்லி விமான டிக்கெட்டுகள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்  3 நட்சத்திர ஹோட்டலில் 4 நாட்கள் தங்கும் வசதி, மாஸ்கோவில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டலில் 20 நாட்கள் தங்கும் வசதி, உணவு, தடுப்பூசி செலவு, ஆகியவை இதில் அடங்கும். 
மாஸ்கோ-செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-மாஸ்கோ ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள உல்லாசப் பயணங்கள் மற்றும் சுற்றுலாத் கட்டணம், 24 நாட்களுக்கான காலை உணவு மற்றும் இரவு உணவும் இதில் அடக்கம். ஒரு நேரத்தில் 30 பயணிகள் செல்லலாம். 10,000 ரூபாய் விசா கட்டணம் மட்டுமே இந்த பேக்கேஜில் சேர்க்கப்படவில்லை.” என்று பயண நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
 
இது குறித்து, ரஷ்யா விசா விண்ணப்ப மையத்தை தொடர்பு கொண்ட போது, “இந்திய குடிமக்கள் தற்போது எந்த வகையான விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம். புது தில்லியில் விசா மையம் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், தற்போதைய தொற்று நோய் பரவலை கருத்தில் கொண்டு, விசா விதிகள் மற்றும் விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு வராத நிலையில், எந்தவொரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்வதற்கு முன் , அனைத்து விபரங்களையும் முழுமையாக சரிபார்த்து முடிவெடுப்பது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.


ALSO READ | சிங்கப்பூர் திரிபு’ வைரஸ் சர்ச்சை கருத்தால் சிக்கலில் சிக்குகிறாரா கெஜ்ரிவால்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR