கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; ₹190 கோடி லாட்டரி பரிசு டிக்கெட் தொலைந்த சோகம்

கலிபோர்னியாவில் லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 17, 2021, 04:02 PM IST
  • லாட்டரியில் அமெரிக்க பெண் ₹190 கோடி ரூபாய் வென்றார்
  • கலிபோர்னியாவில் 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 190 கோடி) லாட்டரி சீட்டு விற்கப்பட்டது.
  • இப்போது அடுத்த கட்ட விசாரணைக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; ₹190 கோடி லாட்டரி பரிசு டிக்கெட் தொலைந்த சோகம் title=

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் (Caloifornia) லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார்

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 190 கோடி) லாட்டரி சீட்டு விற்கப்பட்டது. இந்த டிக்கெட்டைப் பெற்ற பெண்ணால் பரிசை வென்ற போதும்,  ஒரு பைசா கூட பெற முடியவில்லை. அதனால், அந்த பெண், செய்வதறியாமல் திகைத்து போயுள்ளார்.

நடந்தது என்னவென்றால்,  அந்தப் பெண் டிக்கெட் இல்லாமல் லாட்டரி கடைக்கு சென்று வென்ற லாட்டரி பணம் கேட்டார். அந்தப் பெண் டிக்கெட் எண்ணைக் குறித்து வைத்திருந்ததால், அதை வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டார்,. அவர்,  டிக்கெட்டை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நிலையில், ஞாபகம் இல்லாமல் கவனக் குறைவாக அதை சலவைக்கு போட்டு விட்டார். சலவை கடையில் பதிவான வீடியோ காட்சிகளை,  கலிபோர்னியா லாட்டரி அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த டிட்கெட் அந்த பெண்ணின் டிக்கெட் தான் என்பதை உறுதிப்படுத்த இந்த காட்சிகள் போதுமானதாக இல்லை.

ALSO READ | உலகின் மிக அழுக்கான மனிதன்; 65 ஆண்டுகளாக குளிக்காத ‘மணம்’ வீசும் மனிதர்

 

லாட்டரி அதிகாரிகளிடம் இருந்து லாட்டரி பரிசு பணத்தைப் பெறுவதற்கு, அந்தப் பெண் டிக்கெட்டைக் காட்ட வேண்டும் அல்லது பின்புறத்தின் புகைப்படத்தை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், இந்த வழக்கில் பெண் மேல் விசாரணைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.

டிக்கெட்டுகளை விற்கும் இந்த கடைக்கு 130,000 டாலர் போனஸ் கிடைத்துள்ளது. பரிசுத் தொகைக்கு உரிமை கோருபவர் யாரும் இல்லை என்றால், கலிபோர்னியா பள்ளிகளுக்கு $ 19.7 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News